பொறியாளர், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் ஸ்ரீதர் வேம்பு கருத்து
சென்னை:'தமிழக பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம்' என, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, 'ஜோஹோ' தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, 'எக்ஸ்' தளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவு:
இந்தியாவில், ஜோஹோ நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தின் கிராமப்புறங்களைச் சேர்ந்த பொறியாளர்கள், மும்பை, டில்லியில் உள்ள ஜோஹோ வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகின்றனர். எங்கள் வணிகத்தின் பெரும் பகுதி மும்பை, டில்லி நகரங்கள் மற்றும் குஜராத்தில் இருந்தும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வாடிக்கையாளர்களுடனான வணிகம், நாங்கள் மேற்கொள்ளும் சிறப்பான சேவையை பொறுத்தே அமைகிறது. எனவே, ஹிந்தி தெரியாமல் இருப்பது பெரும்பாலும் தமிழக மக்களுக்கு ஒரு பெரிய குறைபாடு.
ஹிந்தி கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம். நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் இடைவிடாமல் ஹிந்தி படிக்க கற்றுக் கொண்டேன், இப்போது ஹிந்தியில் பேசுவதை என்னால், 20 சதவீதம் புரிந்து கொள்ள முடிகிறது.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். எனவே, அரசியலை புறக்கணித்து விட்டு ஹிந்தி கற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பாப்பாபட்டி கோயிலுக்கு புறப்பட்டது மாசிப்பெட்டி மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு
-
குப்பை தரம் பிரிக்கும் மையமான கழிப்பறை
-
24 மணி நேர தொடர் நாட்டியாஞ்சலி
-
குன்றத்து கோயில்களில் மகா சிவராத்திரி விழா
-
கோயில் விழாவில் 431வது ஆண்டாக நாடகம்
-
விக்டோரியா எட்வர்ட் மன்ற முறைகேடுகள்; முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வலியுறுத்தல்