தென் மாவட்டங்களில் இன்று கன மழை

சென்னை:டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement