போராட்ட அறிவிப்பால் அமைந்தது வேகத்தடைஈரோடு:ஈரோடு, நசியனுார் சாலை, கைகாட்டி


போராட்ட அறிவிப்பால் அமைந்தது வேகத்தடைஈரோடு:ஈரோடு, நசியனுார் சாலை, கைகாட்டி


வலசு பிரிவில் அதிகளவில் சாலை விபத்து நடப்பதும், வாகனங்கள் வேகத்துடன் அத்துமீறி செல்வதும் வாடிக்கையானது. விபத்தை குறைக்கவும், அவ்விடத்தில் வேகத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, கலெக்டர் அலுவலகம், போலீசாருக்கு இப்பகுதி மக்கள் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று, நசியனுார் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதாக அப்பகுதியினர் அறிவிப்பு வெளியிட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் திருவள்ளுவர் நகர், கைகாட்டிவலசு பிரிவு பகுதியில் உள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால், மறியல் அறிவிப்பு கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையின்படி நேற்று காலை, நெடுஞ்சாலை துறையினர், பொதுமக்கள் குறிப்பிட்ட இடத்தில் வேகத்தடை அமைத்து கொடுத்தனர்.

Advertisement