கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோபியில் வழக்கறிஞர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்



கோபி:கோபி வக்கீல்கள் சங்கம் சார்பில், நீதிமன்ற பணியில் இருந்து விலகி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோபியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைவர் காளத்திநாதன் தலைமை வகித்தார். வக்கீல்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்கீல்களின் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், வக்கீல்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், வெல்பர் ஸ்டாம்ப் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், வக்கீல்களுக்கு வழங்கும் சேமநல நிதியை உயர்த்தி வழங்காததை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

Advertisement