ஈரோட்டில் வாலிபர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை
ஈரோட்டில் வாலிபர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை
ஈரோடு:ஈரோட்டில், வாலிபர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.ஈரோடு, திண்டல் காரப்பாறை புது காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 28, ஏ.சி. மெக்கானிக். இவர் மனைவி சவுமியா பள்ளி ஒன்றில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று மாலை சவுமியா பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, ஸ்ரீதர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஸ்ரீதரின் வயிற்று பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் குத்திய காயமும், பின் தலையில் ரத்த காயமும் காணப்பட்டது. ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த, 24ல் ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர்களான பால முருகன், தமிழரசன் ஆகியோர் மது அருந்தி உள்ளனர். அப்போது, பால
முருகனின் மனைவி குறித்து தமிழரசன் கூறிய வார்த்தை யால், மூவருக்கும் இடையே வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தாலுகா போலீசில் பால
முருகன் புகார் அளித்துள்ளார். தமிழரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவாக உள்ளார். இச்சம்பவத்தின் முன் பகையால் ஸ்ரீதரை, தமிழரசன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தமிழரசனை பிடித்து விசாரித்தால் தெரியவரும். ஸ்ரீதரை கொலை செய்வதற்கு வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் மற்ற காரணங்கள் குறித்தும் விசாரிக்கிறோம். இவ்வாறு கூறினர்.
மேலும்
-
குகைக்குள் 'டிரெக்கிங்': ஒடிசா அரசு அறிமுகம்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு