'அத்திக்கடவு அவினாசி திட்டம் துவங்கிஆறு மாதமாகியும் தண்ணீர் வரவில்லை'
'அத்திக்கடவு அவினாசி திட்டம் துவங்கிஆறு மாதமாகியும் தண்ணீர் வரவில்லை'
பெருந்துறை:பெருந்துறை அருகே, அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்ட குளத்திற்கு, இதுவரை ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை.
பெருந்துறை ஒன்றியம், சுள்ளிபாளையம் ஊராட்சியில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான நிலத்தில், 8.5 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் வந்தால், சுள்ளிபாளையம் மற்றும் சுற்றி உள்ள சிலேட்டர் நகர், கூட்டுறவு நகர், ஐயப்பன் நகர், பள்ளக்காட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றின் நிலத்தடி நீர் உயரும். இந்த குளம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்த்தபோது, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து தினமும் மக்கள் குளத்திற்கு தண்ணீர் வருவதை காண சென்றனர். ஆனால் ஆறு மாதங்களாகியும் இதுவரை ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை. வரும் கோடையில், குடிநீர் தட்டுப்பாட்டையும், கால்நடைகளின் தண்ணீர் தேவையை சமாளிக்கவும், அரசு நடவடிக்கை எடுத்து குளத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
மேலும்
-
பாப்பாபட்டி கோயிலுக்கு புறப்பட்டது மாசிப்பெட்டி மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு
-
குப்பை தரம் பிரிக்கும் மையமான கழிப்பறை
-
24 மணி நேர தொடர் நாட்டியாஞ்சலி
-
குன்றத்து கோயில்களில் மகா சிவராத்திரி விழா
-
கோயில் விழாவில் 431வது ஆண்டாக நாடகம்
-
விக்டோரியா எட்வர்ட் மன்ற முறைகேடுகள்; முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வலியுறுத்தல்