'தொகுதி மறுவரையறை பாதிப்பை ஏற்படுத்தும்'
சேலம்: ''தொகுதி மறுவரையறை, தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்,'' என, சேலம் தி.மு.க., -எம்.பி., செல்வகணபதி தெரிவித்தார்.
இதுகுறித்து சேலத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி: மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு, தொகுதி மறுவரையறை செய்யும்போது, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிங்களுக்கு பாதிப்பு ஏற்படும். 1976ல் தொகுதி வரையறை, 25 ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், 2002ல் திருத்தம் செய்யப்பட-வில்லை. தற்போது தொகுதி வரையறை செய்தால், 39 தொகுதி, 31 ஆக குறைந்துவிடும்.
தென் மாநிலங்களில், 139 தொகுதிகள், 103 ஆக குறைந்து-விடும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, அனைத்து துறைக-ளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதற்கு, லோக்சபா தொகுதியை குறைத்து தண்டனை தரக்கூடாது. 2026ல் செய்ய வேண்டிய தொகுதி வரையறைக்கு, இப்போதே அவசரம் ஏன்? தற்போ-துள்ள லோக்சபா தொகுதி, 543ஐ அப்படியே வைத்து கொண்டு, மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் தொகுதி அறிவிக்கப்-படும் என்ற கருத்தும் நிலவுகிறது. அதன்படி ஒட்டுமொத்த தொகுதிகள், 848 ஆக அதிகரித்தாலும் தமிழகத்துக்கு பெரிய பலன் இல்லை. தென் மாநிலங்களில் வெறும், 34 தொகுதி தான் அதிகரிக்கும்.
ஆனால், ஹிந்தி பேசும் மாநிலங்களில், 200 தொகுதிகள் வரை அதிகரிக்கும். அதன்மூலம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் கவனம் செலுத்தி, பா.ஜ., மத்தியில் ஆட்சியை பிடித்துவிடும். மீதி மாநி-லங்களில் அவர்கள் ஜெயிக்காவிட்டாலும் பாதிப்பு வராது. நடிகர் விஜய் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கக்கூடாது. மாநில உரி-மைகள் பறிபோகும்போது அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்-றாக நின்று தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.