வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

மேட்டூர்: இந்திய சட்ட விதிகளில் மத்திய அரசு, சில திருத்தங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. அதில், 3 விதிகள் பாதகமாக உள்ளதாக கூறி, அதை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி, மேட்டூர் அணை வக்கீல் சங்கத்தினர், நேற்று, நீதிமன்ற பணியை புறக்க-ணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செயலர் மனோகரன், துணைத்தலைவர் மாலதி உள்பட, 50க்கும் மேற்பட்ட வக்-கீல்கள், கோஷங்களை எழுப்பினர். மேலும் பிப்., 28ல் உண்ணா-விரதம், வரும் மார்ச், 1 வரை நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த, முடிவு செய்தனர்.

Advertisement