250 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்
சேலம்: வார இறுதி நாட்கள், வளர்பிறை முகூர்த்த தினங்களையொட்டி, சேலம் கோட்டம் சார்பில், நாளை முதல் மார்ச், 3 வரை, 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி சேலம் புறநகர், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணா-மலை, சிதம்பரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம், www.tnstc.in என்ற இணையதளம், அதன் செயலி வழியே முன்பதிவு செய்யப்பட்டு, அரசு விரைவு பஸ்கள் இயக்-கப்படுகின்றன. அதனால் நெரிசலை தவிர்த்து, பயணியர் பயணம் செய்யலாம் என, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement