சேலத்தில் கூட்டுறவு ஜவ்வரிசி ஆலை தேவை கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
சேலம்: 'கூட்டுறவு சர்க்கரை ஆலையை போல, விவசாயிகள் கூட்ட-மைப்பு ஏற்படுத்தி, சேலத்தில் கூட்டுறவு ஜவ்வரிசி ஆலை, மர-வள்ளி எத்தனால் ஆலை நிறுவ வேண்டும்' என, வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்-தினர்.
தமிழக சட்டசபையில் வேளாண் தனி பட்ஜெட் வரும், 15ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் கருத்து கேட்பு கூட்டம், நேற்று நடந்தது. அமைச்சர்கள் ராஜேந்-திரன், முத்துசாமி, கயல்விழி முன்னிலை வகித்தனர்.வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள், கருத்துகளை கேட்டறிந்தனர்.
அதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:
சேலம் மாவட்ட உழவர் மன்ற கூட்டமைப்பு தலைவர் ஜெய-ராமன்: சேலம் மாவட்டத்தின் பிரதான பயிர் மரவள்ளி. தற்போது மரவள்ளி கிழங்கு டன், 4,000 ரூபாய்க்கு குறைவாக விற்பதால் விலை கட்டுப்படி ஆகாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்-ளனர். அதனால் மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் எடுப்-பதை போல, மரவள்ளியில் இருந்து எத்தனால் தயாரிக்க வேண்டும். மக்காச்சோளம் கிலோ, 22 ரூபாய், மரவள்ளி வெறும், 4 ரூபாய் என்பதால் செலவும் குறைவு. நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுறவு சர்க்கரை ஆலையை போல, விவசாயிகள் கூட்டமைப்பு ஏற்படுத்தி, சேலத்தில் கூட்டுறவு ஜவ்வரிசி ஆலை, மரவள்ளி எத்தனால் ஆலை நிறுவ வேண்டும். அத்துடன் கருமந்-துறையில் வேளாண் கல்லுாரி அமைக்க வேண்டும்.
இதே கருத்தை, விவசாயிகள் பலர் ஆமோதித்தனர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் சுந்தரம்: காவிரி - பொன்னியாறு - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை, நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால், சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதி, நாமக்கல் மாவட்ட பெரும் பகுதி, நீர்வளத்தில் தன்னிறைவு பெறும். கடந்தாண்டு மரவள்ளி டன், 12,500 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 3,000 - 4,000 ரூபாய்க்கு விற்பதால் விவசாயிகள் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்-ளனர். சேலம் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி, மொத்த-மாக வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதை தமிழகத்-திலும் பயன்படுத்த வேண்டும். சத்துணவு திட்டம், கோவில் அன்னதான திட்டம், சிறை கைதிகள், மருத்துவமனை நோயாளிக-ளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருளாக மாற்றி வழங்கு-வதன் மூலம், தேவை அதிகரித்து, மரவள்ளிக்கு நிரந்தர ஆதார விலை கிடைக்கும். அத்துடன், 250, 500 கிராம் அளவில் பாக்-கெட்களில் ஜவ்வரிசியை அடைத்து ரேஷன் கடைகளில் விற்றால், மரவள்ளி விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறக்கும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி.,க்கள் செல்வராஜ், செல்-வகணபதி, மலையரசன், மணி, பிரகாஷ், சுப்பராயன், எம்.எல்.ஏ.,க்கள் அருள், சதாசிவம், உதயசூரியன், ராமலிங்கம், வெங்கடாசலம், சந்திரகுமார், மணிகண்டன், வெங்கடேஸ்வரன், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகளை கேட்டறிந்து பட்ஜெட்
வேளாண் துறை அமைச்சர் தகவல்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 2025 - 26ம் ஆண்டுக்கு, வேளாண் தனி பட்ஜெட் குறித்த, ஒன்பது மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம், மண்டல அளவில் நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், நீலகிரி, கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் கலந்தா-லோசனை செய்யப்பட்டு, வரும் நிதியாண்டுக்கு வேளாண் துறை நிதிநிலை அறிக்கை தயாரித்து தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டி: விவசாயிகள், அவர்கள் பகுதி, மண் வளத்துக்கு ஏற்ப கோரிக்கை வைத்துள்ளனர். விளை-பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி லாபகர முறையில் சந்தைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்-கொள்ளப்பட்டு வருகின்றன. மழை, வெள்ளம், வறட்சி உள்-ளிட்ட தற்காலிக இடர்பாடுகளால், மூன்றரை ஆண்டில் பயிர் காப்பீடு திட்டம் மூலம், 5,148 கோடி ரூபாய் நிவாரணத்தொகை, நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்-ததும், ஒரு லட்சம் மின் இணைப்பு தாமதமின்றி வழங்கப்பட்-டது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் விளையக்கூடிய சிறப்பு வாய்ந்த, 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்-கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.