'தமிழகத்தை குறி வைத்து தாக்குவது ஜனநாயகம் அல்ல'
சேலம்: ''மத்திய அரசு, தமிழகத்தை குறி வைத்து தாக்குவது ஜனநாயகம் அல்ல,'' என, இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து சேலத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ள, 49 நவோதயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசி-ரியர் கூட கிடையாது. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்-தினால், அது எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, அதை ஆதரிப்பவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். அதனால் கல்-வியில் இடைநிற்றல் அதிகரிக்கும். பிற மொழிகள் தாய் மொழிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் மும்மொழி கொள்-கையை கைவிட வேண்டும். அதேபோல் தொகுதி மறு சீரமைப்-பையும் மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசு, தமிழ-கத்தை குறி வைத்து தாக்குவது ஜனநாயகம் அல்ல. அது கண்ட-னத்துக்குரியது.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு, 10 ஆண்டில் படிப்படியாக நிதியும் குறைத்து, பயனாளிகள் எண்-ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு முடிய வழங்க வேண்டிய, 2,208 கோடி ரூபாய் ஒதுக்காததால், தொழி-லாளர்களுக்கு டிசம்பர் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. தமி-ழக அரசு இனியும் தாமதிக்காமல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசியலில் புரட்சி நடக்கும் என விஜய் கூறுவது, அவரது கருத்து. தமிழகத்தில் தினமும் புரட்சி நடந்து கொண்டிருப்பது, விஜய்க்கு தெரியவில்லை. அவரால் புரட்சி செய்ய முடியாது. ஒரு வேளை புரட்சியை ஏற்படுத்தினால் அது உழைக்கும் தொழிலா-ளர்களுக்கானதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.