'3 அமைச்சர் மனு வாங்கியும் எதுவும் செய்யவில்லை'
பனமரத்துப்பட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் நேற்று கொண்டாடப்பட்-டது. கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., செயலர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார்.
பனமரத்துப்பட்டியில், எம்.ஜி.ஆர்., சிலை, ஜெயலலிதா படத்-துக்கு, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், வீர-பாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து உள்ளிட்டோர் மாலை அணி-வித்து வணங்கினர். பின் இளங்கோவன் பேசுகையில், ''சேலத்தில் பொறுப்பு அமைச்சர் மனு வாங்கினார். அப்புறம் வந்த உள்ளாட்சி அமைச்சர் மனு வாங்கினார். இப்போ, புதுசா வந்த அமைச்சர் மனு வாங்கினார். 3 தி.மு.க., அமைச்சர்கள் மனு வாங்கியும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில், முதல்வரும் பெட்டி வைத்து மனு வாங்கினார். இன்னும் அந்த பெட்டியே திறக்க-வில்லை,'' என்றார்.
புறநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழ்மணி, மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன், நகர செயலர் சின்னதம்பி, அம்மா பேரவை மாவட்ட துணை செயலர் சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்-டது.