சிறுமிக்கு பாலியல் தொல்லை புரோட்டா மாஸ்டர் கைது



கரூர்:கரூரில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புரோட்டா மாஸ்டரை, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் கைது செய்தனர்.


திருச்சி மாவட்டம், கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஆன்-டனி டேனியல் ராஜ், 29. இவர், கரூரில் வஞ்சியம்மன் கோவில் தெருவில் தங்கி, புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வரு-கிறார். இந்நிலையில் கடந்த, 24 இரவு ஆன்டனி டேனியல் ராஜ், அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியின் வீட்டில் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, கரூர் மகளிர் போலீசார், ஆன்டனி டேனியல் ராஜை, போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்து விசா-ரிக்கின்றனர்.

Advertisement