குறிஞ்சி நகரில் கழிப்பறை தினமும் திறக்க வலியுறுத்தல்
கரூர்: கரூர், தான்தோன்றிமலை குறிஞ்சி நகரில் உள்ள கழிப்பறையை, தினமும் திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்-ளனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, தான்தோன்றிமலை குறிஞ்சி நகரை ஒட்டி வடக்கு தெருவில், 2014-15ம் ஆண்டில் துாய்மை இந்-தியா திட்டத்தின் கீழ், 10 லட்சம் மதிப்பில் நவீன சமூதாய கழிப்-பறை புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கழிப்பிடம் அமைந்துள்ள பகுதியில் பெரும்பாலான குடியி-ருப்புகளில் கழிப்பிட வசதி இல்லாமல் உள்ளது. இதன் காரண-மாக இந்த பகுதியினர், கழிப்பறையை பயன்படுத்தி வருகின்-றனர். காலை முதல் மதியம் வரை திறந்து இருக்கிறது.ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் திறப்பது இல்லை. இதனை தினமும் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்-படுகின்றனர். மேலும் இதை பராமரிக்க, தேவையான நபர்கள் பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது மூடப்படுவதாக கூறப்ப-டுகிறது. அனைவரின் நலன் கருதி சுகாதார வளாகத்தை தினமும் திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு-றுத்துகின்றனர்.