சின்டெக்ஸ் தொட்டி பழுது சீரமைக்க மக்கள் கோரிக்கை

கரூர்:கரூர் தெற்கு காந்திகிராமத்தில், பழுதடைந்த சின்டெக்ஸ் தொட்-டியை சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 48 வார்டுகளிலும் பொது-மக்கள் பயன்பாட்டிற்காக போர்வெல் அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இதன்படி, கரூர் தெற்கு காந்திகிராமம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூங்கா சாலையில் உள்ள ரேஷன் கடை முன் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்-டுள்ளது. இதனை, மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், நிலத்-தடி நீர்மட்டம் சரிவு, மின் மோட்டார் பழுது போன்ற காரணங்-களால் தண்ணீர் வரவில்லை.காவிரி கூட்டு நீர் குறைவாக கிடைக்கும் நேரங்களில், மற்ற பயன்பாட்டுக்கு தொட்டியிலிருந்து மக்கள் தண்ணீர் பிடித்து சென்றனர். தற்போது, காவிரி குடிநீரையும், காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற இடங்களில் புதிய போர்வெல் அமைத்தும், மின் மோட்டார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என, கோரிக்கை
வைத்துள்ளனர்.

Advertisement