கரூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு



கரூர்: கரூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு மார்ச், 2ல் வீரர்கள் தேர்வு நடக்கிறது என, மாவட்ட செயலாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும், மாவட்டங்களுக்கு இடையில் நடக்கும், 16 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள, கரூர் மாவட்ட அணிக்கு வரும் மார்ச், 2ல் வீரர்கள் தேர்வு நடக்கிறது. தேர்வில் பங்கேற்க உள்ள வீரர்கள், தங்களின் பிறப்பு சான்று, ஆதார் கார்டு அல்லது பள்ளியில் படிப்பதற்கான சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும், கிரிக்கெட் வீரர்கள் வெள்ளை சீருடை, ஷூ, விளை-யாட்டு கிட் போன்றவற்றை கொண்டு வர வேண்டும். தகுதியுள்-ளவர்கள் வரும் மார்ச், 2 காலை, 6:00 மணிக்கு கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள, கரூர் மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையத்துக்கு வர வேண்டும். மேலும், 98945- 48428, 99658- 17668 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement