மானாவாரி நிலங்களில் கொள்ளு அறுவடை பணி

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மானாவாரி நிலங்களில் கொள்ளு அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.


கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரியபாளையம், பஞ்சப்பட்டி, சேங்கல், சிவாயம், புனவாசிப்பட்டி, அந்தரப்-பட்டி, கணக்கம்பட்டி, சரவணபுரம், குழந்தைப்பட்டி, வேப்பங்-குடி, பாப்பகாப்பட்டி, குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் கொள்ளு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விளைச்சல் கண்டுள்ள செடிகளை, விவசாய தொழிலாளர்கள் கொண்டு அறுவடை செய்யும் பணி நடந்து வரு-கிறது. கொள்ளு செடிகள் பறிக்கப்பட்டு, பின் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement