'நெக்' அறிவிக்கும் விலையே வியாபாரிகள் வாங்கும் விலை கண்காணிக்க குழு அமைப்பு; நாளை அவசர கூட்டம்

நாமக்கல்: 'தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவால் அறிவிக்கப்படும் விலையே, வியாபாரிகள், முட்டை வாங்கும் விலையாக இருக்க வேண்டும். இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அவசர கூட்டம், நாளை நடக்கிறது' என, 'நெக்' தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ஒரு மாதத்திற்கும் மேலாக, நாமக்கல் மண்டலத்தில் அறிவிக்கப்படும் விலைக்கும், அதிலிருந்து பண்ணையாளர்களிடம் வியாபாரிகள் வாங்கும் விலைக்கும் வித்தியாசம் அதிகமாகவே தொடர்கிறது. இது, நாமக்கல் மண்டல முட்டை கோழிப்பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதோடு, அகில இந்திய அளவில் மற்ற மண்டலங்களையும் கடுமையாக பாதிக்கிறது.இதனால், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு(நெக்) அறி-விக்கும் விலையே, வியாபாரிகள் வாங்கும் விலையாக இருக்க வேண்டும் என, பெரும்பான்மை கோழிப்பண்ணையாளர்கள் விரும்புகின்றனர். அதை நடைமுறைப்படுத்த அகில இந்திய அளவில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில், ஒரு கண்-காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐதராபாத், விஜயவாடா, ஹோஸ்பெட், நாமக்கல், வெஸ்டு, கோதாவரி, தனுகு உள்ளிட்ட மண்டலங்களில், இனி வரும் நாட்களில், 'நெக்' அறிவிக்கும் விலையே, வியாபாரிகள் முட்டை வாங்கும் விலையாக இருக்கும் என, கடந்த, 22ல், ஐத-ராபாத்தில் நடந்த 'நெக்' கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவெ-டுக்கப்பட்டுள்ளது.
இவற்றை கண்டிப்பாய் நடைமுறைப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, அகில இந்திய முட்டை விலை ஒழுங்குபடுத்தும் குழுவின் அவசர கூட்டம், நாளை நடக்-கிறது. இதில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின்(நெக்) நாமக்கல் மண்டலம் மற்றும் வட்டாரக்குழு உறுப்பினர்கள், மத்-திய செயற்குழு உறுப்பினர்கள், முட்டை விலை நிர்ணய ஆலோ-சனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர், ஆலோசனை வழங்க உள்ளனர்.இந்த சிறப்பு அவசர கூட்டம், நாளை காலை, 11:00 மணிக்கு, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள, 'நெக்' நாமக்கல் மண்டல அலுவலகத்தில் நடக்கிறது. 'நெக்' அறிவிக்கும் விலையே, வியாபாரிகள் வாங்கும் விலையாக இனி வரும் நாட்-களில் கண்டிப்பாய் இருக்க தேவையான நடவடிக்கைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு எடுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement