கரூரில் 9,797 மெ.டன் நெல் கொள்முதல் கடந்தாண்டை விட இரு மடங்கு அதிகம்

கரூர்: கரூர் மாவட்டத்தில், அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில், 9,797 மெ.டன் நெல் கொள்முதல் ஆகியுள்ளது.

இது கடந்-தாண்டை விட, இரு மடங்கு அதிகம்.கரூர் மாவட்டத்தில், 37 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடியில் விவ-சாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. திருப்பூர், நாமக்கல், சேலம் பகுதிகளை சேர்ந்த நெல் வியாபாரிகள், நேரடியாக களத்துக்கு வந்து நெல் வாங்கி செல்கின்றனர். கடந்தாண்டு ஆந்திரா பொன்னி எனும் பி.பி.டி., 5204 அரிசி, 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 1,500 ரூபாயிலிருந்து, 1,800 ரூபாய் விலை போன நிலையில், இந்-தாண்டு, 500 ரூபாய் வீழ்ச்சியடைந்து, 1,200 முதல், 1,300 ரூபாய் விலை போகிறது. கடந்தாண்டு கர்நாடகா பொன்னி எனும் ஜே.ஜி.எல்., ஒரு மூட்டை, 1,400 லிருந்து, 1,600 ரூபாய் வரை விற்ற நிலையில், 350 ரூபாய் விலை சரிந்து, 1,150 முதல், 1,250 ரூபாய்க்கு விற்கிறது.
ஆனால், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், சன்னரக நெல் (பொன்னி) ஒரு மூட்டை, 1,470 ரூபாய், பொதுரக நெல், 1,443 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. இது, வெளிமார்க்கெட் விலையை விட கூடுதல் விலை என்பதால், இங்கு, அதிகமாக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் கொள்-முதல் நிலையங்களில், கடந்தாண்டை விட இந்தாண்டு இரு மடங்கு நெல் கொள்முதல் ஆகி உள்ளது. கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், 17 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்-டன. அதில், மூன்று இடங்களில் அறுவடை முடிந்ததால், கொள்-முதல் நிலையம் மூடப்பட்டது. மற்ற இடங்களில் கொள்முதல் நிலையங்கள்
செயல்பட்டு வருகின்றன.
இதுவரை சன்னரக நெல், 8,543 மெ.டன், பொதுரக நெல், 1,254 டன் என மொத்தம், 9,797 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்-பட்டு உள்ளது. கடந்தாண்டு, 4,616 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சென்ற ஆண்டை விட, 5,181 டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அறுவடை நடந்து கொண்டு இருப்பதால், மேலும் நெல் கொள்முதல் அதிக-ரிக்கக்கூடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement