தக்காளி ரூ.10; புடலை ரூ.5 விவசாயிகள் கவலை

வாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடி உழவர் சந்தையில், சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், காய்கறி கொண்டு வந்து விற்கின்றனர்.

அங்கு கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி, 25 முதல், 30 ரூபாய் வரை விற்ற நிலையில், நேற்று, 13 முதல், 15 ரூபாயாக சரிந்தது. கத்தரிக்காய், 30 முதல், 40 ரூபாய்க்கு விற்ற நிலையில், 18 முதல், 20 ரூபாயாக சரிந்தது. மேலும் கிலோ சுரைக்காய், 12, பூச-ணிக்காய், 15, புடலை, 20 ரூபாய்க்கு விற்பனையானது. வாழப்பாடியில் உள்ள தனியார் காய்கறி மண்டியில் தக்காளி கிலோ, 10 முதல், 12 ரூபாய் வரை விலைபோனது. புடலங்காய் கிலோ, 5 ரூபாய்க்கு விற்பனையானது. இதுகுறித்து உழவர் சந்-தையில் கடை வைத்துள்ள விவசாயி சந்திரன் கூறுகையில், ''காய்-கறி விளைச்சல் சில நாட்களாக அதிகரித்துள்ளதால், விலை சரிந்-துள்ளது. இதனால் போதிய விலையின்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்,'' என்றார்.

Advertisement