இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்



சேலம்:வேலுாரை சேர்ந்த விஜயபானு, 48, என்பவர், சேலம், அம்மா-பேட்டையில் அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை நடத்தி, பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.


இதுதொடர்பாக கடந்த ஜனவரியில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, 12.67 கோடி, 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்கள், ஆவணங்களை பறி-முதல் செய்தனர். இதில் விஜயபானு உள்ளிட்டோரை கைது செய்-தனர். இதில், 120க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வெங்கடேசன், சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக இடமாற்றப்பட்டிருந்தார். அவர் இன்று பொறுப்பேற்க உள்ளார்.இதனால் நாமக்கல்லில் பணியாற்றிய டி.எஸ்.பி., ராமசாமி, பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்-டுள்ளார். அவர் இன்று பொறுப்பேற்க உள்ளார். தொடர்ந்து, இந்த மோசடி வழக்கை விசாரிப்பார் என, போலீசார் தெரிவித்-தனர்.

Advertisement