மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 20ல், அணைக்கு வினாடிக்கு, 167 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 21ல், 641 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து, 22ல், 491; 24ல், 329 கன அடியாக சரிந்தது.


நேற்று முன்தினம் வினாடிக்கு, 284 கனஅடியாக இருந்த நீர்வ-ரத்து நேற்று திடீரென, 829 கன அடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் தமிழக, கர்நாடக மாநில எல்லை பகுதியில் பெய்த மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணை நீர்-மட்டம், 109.80 அடி, நீர் இருப்பு, 78.12 டி.எம்.சி.,யாக இருந்தது. குடிநீருக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

Advertisement