அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்-சியில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜ-முத்து பேசினர். தொடர்ந்து மாவட்ட முன்னாள் கவுன்சிலர் மணி-கண்டன், 'சிவராத்திரி திருநாளில் உறுதி ஏற்போம்; அடுத்த ஆண்டு தமிழக முதல்வராக, இ.பி.எஸ்., பதவி ஏற்க உறுதி ஏற்போம்' என உறுதிமொழி வாசித்தார். அதை, அ.தி.மு.க., நிர்-வாகிகள், தொண்டர்கள், இரு விரல்களை காட்டி அப்படியே வாசித்தனர்.தொடர்ந்து, 'அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வராகி நம்ம மண்ணை மிதிப்பாரு; அண்ணன் இளங்கோவன் முக்கிய அமைச்-சராக இருப்பாரு' என, மணிகண்டன் கூற, கட்சியினர் கை தட்டி வரவேற்றனர். ஒன்றிய செயலர்களான, கிழக்கு பாலச்சந்திரன், மேற்கு ஜெகநாதன், மாவட்ட அம்மா பேரவை துணைத்தலைவர் சித்துராஜி, அண்ணா தொழிற்சங்க தலைவர் நல்லப்பன் உள்-ளிட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும்
திருப்பதி லட்டு வழங்கப்பட்டது.

