ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை

ஓசூர்: பாகலுார் அருகே, 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மர கட்-டைகளை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், ஒரு கோடி ரூபாயில் வீடு கட்டி, சொகுசாக வாழ்ந்த புரோக்கரை தேடி வரு-கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே, கூசனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜூ, 43. பாகூர் ஜங்ஷன் பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டின் பின்புறம், செம்மர கட்டைகளை பதுக்கி உள்ளதாக, பாகலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சோதனை செய்த போது மொத்தம், 715 கிலோ அளவிற்கு, 25 செம்மர கட்டைகள் இருந்ததையும், ஆந்-திர வனப்பகுதியில் வெட்டி, கடத்தி வந்ததும் தெரிந்தது. உள்ளூர் சந்தையில், 35 லட்சம் ரூபாயும், சர்வதேச சந்தையில், 3.50 கோடி ரூபாய் வரை விலை போகும் எனவும் தெரிந்தது. போலீசார் சோதனை செய்வதை அறிந்த ராஜூ
தலைமறைவானார்.
செம்மர கட்டை கடத்தலில், புரோக்கர் போல் செயல்பட்ட அவ-ருக்கு பின்னால், பெரிய புள்ளிகள் பலர் இருப்பதாகவும், கூசனப்-பள்ளியில் அவர், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், சொகுசு வீடு கட்-டியதும் தெரியவந்துள்ளது. செம்மர கட்டைகளை கர்நாடகா-விற்கு கடத்தி, அங்கிருந்து வெளிமாநிலங்கள் அல்லது வெளிநா-டுகளுக்கு அனுப்ப, கடத்தல் கும்பல் திட்டமிட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வனத்துறை மெத்தனம்
நேற்று முன்தினம் இரவு, செம்மர கட்டைகள் பதுக்கி வைத்தி-ருந்த தகவல் தெரிந்து, உடனடியாக ஓசூர் வனச்சரக வனத்து-றைக்கு, பாகலுார் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வராததால், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின், மிகவும் தாமதமாக வந்த வனத்துறையினர், அதிகா-லையில் செம்மர கட்டைகளை, போலீசாரிடமிருந்து வாங்கி சென்றனர். பின் வழக்குப்பதிந்து, ராஜூ மற்றும் அவர் பின்பு-லத்தில் உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த, 6 மாதங்களுக்கு முன், கக்கனுார் சோதனைச்-சாவடியில் போலீசார் மூலம் சந்தன கட்டைகள் பிடிக்கப்பட்டன. அவற்றை வாங்கி செல்லவும் வனத்துறையினர் மிகவும் தாமத-மாக வந்தனர். மேலும், ஜவளகிரி, அந்திவாடி, தேன்கனிக்-கோட்டை, குந்துக்கோட்டை உட்பட பல இடங்களில், வனத்-துறை சோதனைச்சாவடி இருந்தும் வனத்துறையினர் பணியில் இருப்பதில்லை. அதனால், வனத்தில் அரிய வகை மரங்கள், வெட்டி கடத்தப்படு
வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement