மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ

கிருஷ்ணகிரி: காதலிக்க வற்புறுத்தி, 10ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் மீது, போக்சோவில் வழக்குப்பதிந்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவி. இவரை, கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி பனந்தோப்பை சேர்ந்த ஹரீஷ், 21, என்ற வாலிபர் தினமும் பின் தொடர்ந்து, தன்னை காதலிக்கக் கூறி, தொல்லை கொடுத்து வந்துள்ளார்.கடந்த, 13ல் பள்ளி அருகே நடந்து சென்ற மாணவியை, ஹரீஷ் வழிமறித்து மிரட்டினார். இது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் படி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோவில் ஹரிஷ் மீது வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர். ஹரிஷ் மீது கடந்த, 3 மாதத்திற்கு முன், இதேபோன்று மற்றொரு புகாரில் போக்சோ வழக்கு பதியப் பட்-டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement