குன்றத்து கோயில்களில் மகா சிவராத்திரி விழா

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு விடிய விடிய அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரருக்கு மாலை 5:30 முதல் இரவு 12:00 மணி வரை நான்கு கால பூஜை நடந்தது. மலைக்கு பின்புறம் எழுந்துள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு ஐந்து கால பூஜைகள் முடிந்து தங்க நாகாபர்ண அலங்காரத்தில் அருள்பாலித்தார். சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு இரண்டு கால பூஜை நடந்தது. மலைமேலுள்ள காசி விஸ்வநாதர், கீழ ரதவீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடந்தது.
கூடல்மலை தெரு கட்டிக்குளம் மாயாண்டி சாமி கோயில் சிவபெருமான், விளாச்சேரி ஈஸ்வரன் கோயில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி, திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதருக்கு ஐந்து கால பூஜைகள் நடந்தது.