கொசு மருந்து அடிப்பு

புதுச்சேரி; காங்., கோரிக்கையை ஏற்று காமராஜர் நகர் தொகுதியில் நேற்று கொசு மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

உழவர்கரை நகராட்ச்சிக்குட்பட்ட காமராஜ் நகர் தொகுதி முழுவதும் கொசு அதிகரித்து உள்ளதால், மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருவதாக காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ், உழவர்கரை நகராட்ச்சி ஆணையர் சுரேஷ்ராஜனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து, ஆணையர்தொகுதி முழுதும் விரைவில் கொசு மருந்து அடிக்கவும், வாய்கால்களை சுத்தபடுத்தவும் நடவடிக்கைஎடுப்பதாக தெறிவித்தார். அதன்பேரில், காமராஜர் நகர் தொகுதி பிருந்தாவனம் பகுதிகளில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

Advertisement