என்.ஆர்., காங்., திடீர் போராட்டம்

திருபுவனை; திருபுவனை தொகுதியில் நடந்த அரசு விழாவிற்கு வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரில் முதல்வர் ரங்கசாமி படம் இல்லாததைக் கண்டித்து என்.ஆர்., காங்., ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.46.58 லட்சம் செலவில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டடம், கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா நேற்று காலை 9;00 மணிக்கு தொகுதி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அமைச்சர் விழாவில் பங்கேற்கவில்லை. அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையில் பூமி பூஜை செய்து, பணியை துவக்கிவைத்தார்.
விழாவிற்காக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி படம் இல்லை. இதனைக் கண்டித்து என்.ஆர்., காங்., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா தலைமையில் மதகடிப்பட்டு மேம்பாலம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் என்.ஆர்., காங்., தொகுதி தலைவர் ராஜா, என்.ஆர்., இலக்கியப் பேரவை தலைவர் தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!
-
சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
-
குழந்தைகளிடம் வன்முறையை விதைக்கும் ஆயுதங்களின் வடிவிலான எழுது பொருட்கள்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது