போதை இல்லா உலகம் விழிப்புணர்வு மாரத்தான்

கடலுார்; திட்டக்குடி ரோட்டரி சங்கம் சார்பில், போதை இல்லா உலகம் என்பதை வலியுறுத்தி வரும் மார்ச் 2ம் தேதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திட்டக்குடியில் நடக்கிறது.

மாரத்தான் போட்டி இரண்டு பிரிவுகளாக நடக்கிறது. 18வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு பெண்ணாடம் கிருஷ்ணா ஜூவல்லரியில் துவங்கி, திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளியில் முடிவடைகிறது. 12வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கி, திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளியில் முடிவடைகிறது.

இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. பங்குபெறும் அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ், டிசர்ட் இலவசமாக வழங்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

Advertisement