கராத்தே போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி; புதுச்சேரி யுனைடெட் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், அகில இந்திய கராத்தே போட்டி உப்பளம் ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.
போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் விராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், புதுச்சேரி வீரர் மோகனசந்துரு, முதலிடம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார். பரிசளிப்பு விழாவில் ரிச்சட் ஜான்குமார், வழக்கறிஞர் சசிபாலன், விளையாட்டு வீரர்கள் நலசங்க தலைவர் முத்துகேசவேலு, இளங்கோவன் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை வழங்கி கவுரவித்தனர்.
புதுச்சேரி மாநில குத்துச்சண்டை சங்க மாநில செயலாளர் கோபு, விளையாட்டு சங்க சேர்மன் ஆளவந்தார், பளு தூக்கும் சங்க பொதுச்செயலாளர் கணபதி, அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர். காங்., தொகுதி தலைவர் பாஸ்கரன், காரைக்கால் மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடுவர்கள் மோகன், அமிர்தராஜ், பிரவீன்குமார், அய்யனார், சந்திரகுமார், விநாயகம், ராஜ்குமார் ஆகியோர் தேசிய நடுவர்களாக செயல்பட்டனர்.
ஏற்பாடுகளை, கராத்தே சங்க நிர்வாகிகள் மனோ, அபிலாஷ், கிருஷ்ணகுமார், ராகுல், செபஸ்தியன், சந்தோஷ்குமார், முகேஷ்லிங்கம், சஞ்சய், ஜெகதீஷ் மற்றும் மாநில ஒருங்கிணைந்த விளையாட்டு வீரர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேலும்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது