குடிநீர் திறக்க எதிர்க்கட்சி தலைவர் மனு 

புதுச்சேரி; ரமலான் நோன்பு துவக்கத்தையொட்டி, காலை 4:00 மணிக்கு தண்ணீர் திறக்ககோரி, எதிர்கட்சித் தலைவர் சிவா, பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு செயற்பொறியாளருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தினமும் காலை 5:00 மணிக்கு மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தற்போது, இஸ்லாமிய மக்களின் ரமலான் நோன்பு வரும் 1ம் தேதி துவங்க இருப்பதால், நோன்பு திறக்க அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து தங்களுடைய பணிகளை துவங்க வேண்டியுள்ளது. ஆகையால், வரும் 1ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மட்டும் தங்கள் துறையின் மூலம் தண்ணீர் திறக்கும் நேரத்தை அதிகாலை 4:00 மணிக்கு மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement