சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா

புதுச்சேரி; கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

விழாவையொட்டி மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை முதல் கால பூஜையும், இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை 2ம் கால பூஜை, நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை 3ம் கால பூஜையும், இன்று அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை 4ம் கால பூஜை நடந்தது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, மாலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

பவானி துர்கா அம்மன் கேட்டரிங் சர்வீஸ் நாகராஜன் குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், தேவசேனாதிபதி குருக்கள், சேது சுப்ரமணிய குருக்கள் செய்திருந்தனர்.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தேவஸ்தான கலையரங்கில் நாட்டியாஞ்சலி நடந்தது.

Advertisement