ஜெ., பிறந்தநாள் விழா

ராமநத்தம்; மங்களூர் ஒன்றிய ஜெ., பேரவை சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ராமநத்தம் அடுத்த கீழக்கல்பூண்டியில் கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க., மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஜெ., உருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை மங்களூர் ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் வேல்முருகன் செய்திருந்தார்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமலிங்கம், வர்த்தக அணி அருள், ஜெ., பேரவை துணை செயலாளர் மனோகரன், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் முருகவேல், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன், ஒன்றிய தகவல்தொழில்நுட்பதுறை ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement