மகா சிவராத்திரி 

புதுச்சேரி; புதுச்சேரி சாரம் வள்ளி தெய்வ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

இதையொட்டி, மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை, 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 12 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால பூஜை, மகா அபி ேஷகம், மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து பரதநாட்டியம், பக்திபாடல் நடந்தது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நீலகண்டன் செய்திருந்தார்.

எல்லைபிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம் ஶ்ரீசாரதம்பாள் கோவிலில் அமைந்துள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை சந்திரமவுலீஸ்வரருக்கு நான்கு காலை விசேஷ பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து சாரதா கலா மந்திர் இசை நாட்டிய பள்ளி சார்பில் இசை நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

மகாசிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement