வாலிபர் மீது தாக்குதல்

புதுச்சேரி; கூனிச்சம்பட்டு முத்தாலம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 35; இவருக்கு சொந்தமாக நிலம் நேற்று முன்தினம் காலை வேலை செய்துவிட்டு வந்தபோது கூனிச்சம்பட்டை சேர்ந்த முருகன் என்பவர், ரஞ்சித்குமாரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு, தான் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் வெட்ட வந்தபோது ரஞ்சித்குமார் தலையில் அடிப்பட்டது, மேலும் முருகன் தான் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை அவர் கண்ணில் தூவி கையால் தாக்கி யுள்ளார். திருக்கனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement