நியூ ஜான்டூயி பள்ளியில் விளையாட்டு போட்டி

பண்ருட்டி; பண்ருட்டி த நியூ ஜான் டூயி மெட்ரிக் உயர் நிலைப் பள்ளியில் மழலையர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது.

பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். இணை செயலர் நிட்டின் ஜோஸ்வா, முத்தையர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு ஆசிரியை இசபெல்லா தாமரைச்செல்வி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். போட்டியில் மழலையர்கள் ஆக்டோபஸ் ஓட்டம், எறும்பு ஓட்ட பந்தயம், பந்து ஒட்டுதல், தொடர் ஓட்டம், பட்டாம்பூச்சி ஓட்டம், பந்துகளை அடுக்குதல், பூக்களை சேர்த்தல், கோழி விளையாட்டு, கபடி, மல்லர் கம்பம் போன்ற பல்வேறு விளையாட்டுகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியை இசபெல்லா தாமரைசெல்வி, பள்ளி மூத்த முதல்வர் வாலண்டினா லெஸ்லி , முதல்வர் உமா சம்பத், தலைமை ஆசிரியர் பாலு ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

Advertisement