மாவட்டத்தில் 11 போலீசாருக்கு மத்திய அரசு பதக்கம் வழங்கல்

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக 11 போலீசாருக்கு மத்திய அரசு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்ட காவல்துறையில் 2020--21ம் ஆண்டு சிறப்பாக பணியாற்றியதற்காக மத்திய அரசால் ஆட்டி யுத்கிரீஷ்த் சேவா பதாக் என்ற பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., அகஸ்டின் ஜோஷ்வா லாமேக், இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, சப் இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், முருகேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், ஹென்றிராஜன், ராஜசேகரன், ரமேஷ்குமார், ஏட்டு கருணாகரன், ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ஸ்ரீதர் ஆகியோருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

கடலுார் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று எஸ்.பி., ஜெயக்குமார், பதக்கங்கள் அணிவித்து பாராட்டினார்.

Advertisement