லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ர நாம அர்ச்சனை

புதுச்சேரி; பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது.

முத்தியால்பேட்டை ராமக்கிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், மாணவர்களின் கல்வி சிறக்க, சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். தற்போது சி.பி.எஸ்.இ., பொதுதேர்வுகள் நடந்து வருகிறது. தொடர்ந்து வரும் மார்ச் 5ம் தேதி முதல் தமிழக பாட திட்ட பொதுதேர்வுகள் நடக்கவுள்ளது.

எனவே, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, இந்தாண்டும், தேர்வு துவங்கும் தினத்தில், காலை 10:30 மணிக்கு, லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. அப்போது, மாணவர்கள் பெயர், நட்சத்திரம், ராசிக்கு சங்கல்பம் செய்யப்படுகிறது.

சகஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, சகஸ்ரநாம புத்தகம், ஹயக்ரீவர் என எழுதும் புத்தகம், வெள்ளி டாலர், ரக்ஷ்ைஷ, பேனா, தேன் போன்றவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு 90954 28302, 89400 93478 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சகஸ்ரநாம அர்ச்னை ஏற்பாடுகளை, வேத ஆகம சம்ரக்ஷண லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் செய்து வருகிறது.

Advertisement