பாபா பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை

பரங்கிப்பேட்டை; மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில், பரங்கிப்பேட்டை பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

சிதம்பரம் ராகவேந்திரா கல்லுாரியில், மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இப்போட்டியில், பரங்கிப்பேட்டை பாபா பிரைமரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

சண்டை பிரிவில் பிரதீஷ், ஜீவித்தன், பவிஷ், கிஷ்கான சாரதி ஆகியோர் முதல் இடத்தையும், அஸ்வின், கவியரசன், கீர்த்தன், கார்த்திக், கிரி ஆகியோர் இரண்டாம் இடத்தையும், கட்டா பிரிவில் ஸ்ரீ கார்த்திக் முதல் இடத்தையும், சஞ்சீவ் குமார், லட்சன், ஜீவித்தன், பவிஷ் ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

சாதனைப் படைத்த மாணவர்களை பள்ளி இயக்குநர் வைரமணி சண்முகம், கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய் ரெங்கநாதன் ஆகியோர் பாராட்டினர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ரேவதி, துணை முதல்வர் சந்தோஷ் குமாரி, பிரைமரி பள்ளி முதல்வர் சந்தோஷி, துணை முதல்வர் சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement