அங்காளம்மன் கோவில் மகோற்சவம் துவக்கம்

அரியாங்குப்பம்; பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மகோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மகோற்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, இன்று முதல், வரும் 4ம் தேதி வரை, தினசரி சாமி வீதியுலா, நாடக நிகழ்ச்சிகள் நடக்கிறது.

வரும் 5ம் தேதி இரவு அம்மன் சிங்க வாகனத்தில் வீதியுலாவும், நள்ளிரவு 12:00 மணிக்கு ரணகளிப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

முக்கிய விழாவாக 6ம் தேதி மாலை தேரோட்டமும், இரவு மயான கொள்ளை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement