மாவட்ட அளவில் சதுரங்க போட்டி; கடலுார் மாணவர்கள் சாதனை

கடலுார்; கடலுார் அடுத்த கங்கணாங்குப்பம் தனியார் பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடந்தது.

கடலுார் மஞ்சக்குப்பம் ராகவேந்திரா சதுரங்க அகாடமி மாணவர்கள் கலந்துகொண்டு பரிசு வென்றனர். 7 வயது பிரிவில் ப்ரித்விஷ் முதல் பரிசும், 9 வயது பிரிவில் வருணேஷ் இரண்டாம் பரிசும், 11 வயது பிரிவில் ரித்தீஷ் முதல் பரிசும், 15 வயது பிரிவில் தமிழ்வேந்தன் முதல் பரிசும், ஸ்ரீஹரி இரண்டாம் பரிசும், பிரித்விராஜ் மற்றும் தர்ஷன் மூன்று மற்றும் நான்காம் பரிசும் வென்றனர்.

17 வயது பிரிவில் கணபதிராம், சிவகார்த்திக் மூன்று மற்றும் நான்காம் பரிசும் வென்றனர். 19 வயது பிரிவில் வசந்தராஜன் முதல் பரிசு வென்றார்.

இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ராகவேந்திரா சதுரங்க அகாடமி நிறுவனர் பாஸ்கர் பாராட்டினார்.

Advertisement