விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுக்குழு கூட்டம்

புதுச்சேரி; புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2வது பொதுக்குழு கூட்டம், வணிக வரி அலுவலகத்தில் நடந்தது.

முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி ஒலிம்பிக் சங்க தலைவரான வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் எம்.எல்.ஏ., விளையாட்டு துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறை, இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு ஊழியர்களை நியமிப்பது, அவர்களுக்கு பதவி உயர்வு, பணி நிரந்தரம், புதிய விளையாட்டு சங்கங்களை சேர்ப்பது, புதிய விளையாட்டு திட்டங்கள், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தை புதுச்சேரியில் நடைமுறைபடுத்தி, புதுச்சேரி வீரர்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உருவாக்குவது, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவது உட்பட பல்வேறு விளையாட்டு துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து, ஆலோசனை செய்யப்பட்டது.

Advertisement