திறமை இருந்தால் சாப்ட் டென்னிசில் சாதிக்கலாம்

கடலுார்; திறமை மட்டும் இருந்தால் போதும், சாப்ட் டென்னிசில் சர்வதேச அளவில் சாதிக்கலாம் என டென்னில் மற்றும் சாப்ட் டென்னிஸ் பயிற்சியாளர் அப்பாதுரை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதியில் ஜப்பானில் சாப்ட் டென்னிஸ் அறிமுகமானது. தரமான டென்னிஸ் பந்துகளின் இறக்குமதி மிகுந்த செலவானதாலும், உள்ளூரில் தயாரிக்க இயலாமல் போனதால் தங்களுக்கு ஏற்ற வகையில் கைமட்டையையும், பந்தையும் வடிவமைத்துக்கொண்டு விளையாடத் துவங்கினர்.
முதலில் ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் விளையாடப்பட்டது. 2004ல் ஐரோப்பிற்கு அறிமுகபடுத்தப்பட்டு, பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் இந்தியாவில் இதற்கான சங்கங்கள் உருவாகின. ஐரோப்பிய சாப்ட் டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் பன்னாட்டு சாப்ட் டென்னிஸ் கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலும், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இப்போட்டிகளில் விளையாடுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சாப்ட் டென்னிஸில் திறமை மட்டும் இருந்தால் போதும், பணம் தடையாக இருக்காது. கடலுாரைச் சேர்ந்த தமிழ்விழி என்ற சாதாரண குடும்பத்து மாணவி, தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றதுடன், சீனாவில் நடந்த சர்வதேச போட்டியில் காலிறுதி சுற்று வரை முன்னேறினார். சத்தியப்பிரியா என்ற அரசுப்பள்ளி மாணவி, தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்து வருகிறார். திறமை மட்டும் இருந்தால் போதும், சாப்ட் டென்னிசில் சாதிக்கலாம் என்பதற்கு இந்த மாணவிகள் உதாரணம். இவ்வாறு அவர், கூறினார்.
மேலும்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது