மாநில அளவிலான சிலம்பம் போட்டி

கடலுார்; ஆசு போர்க்கலை நிறுவனர் குப்புசாமி நினைவாக, மாநில அளவிலான சிலம்பம் போட்டி, குறிஞ்சிப்பாடியில் நடந்தது.
உலக சிலம்ப விளையாட்டு சங்க நிறுவனத் தலைவர் சுதாகரன் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றினார். சென்னை கிளாஸ் டவுன் பவுல் தலைமை நிர்வாகி ஸ்ரீமதி, போட்டியை துவக்கி வைத்தார்.
ஆசு போர்க்கலை நிபுணர்கள் ஜெயக்குமார், மதிவாணன், தமிழ்நாடு சிலம்ப கழக தலைவர் ஏழுமலை, முத்துமோகன், சிகாமணி முன்னிலை வகித்தனர். கடலுார், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் சத்யராஜ், கிருஷ்ணசாமி, ஞானப்பிரகாசம், பாலாஜி மற்றும் நடுவர்கள் பங்கேற்றனர்.
போட்டி ஏற்பாடுகளை ஆசு போர்க்கலை நிபுணர் ராஜதுரை, செய்திருந்தார்.
மேலும்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது