மாநில கைப்பந்து போட்டி; தமிழ் பிரதர்ஸ் அணி சாம்பியன்

திருக்கனுார்; திருபுவனை தொகுதி, வம்புப்பட்டு அப்துல்கலாம் கைப்பந்து விளையாட்டு கழகம் சார்பில், 4ம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி, ஐயனாரப்பன் கோவில் அருகே மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 42 அணிகள் கலந்து கொண்டன.
இரண்டு நாட்கள், இரவு, பகலாக நடந்த போட்டியின் இறுதியில், வம்புபட்டு அப்துல்கலாம் அணியும், கூனிச்சம்பட்டு தமிழ் பிரதர்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. தொடர்ந்து, நடந்த இறுதி போட்டியில் கூனிச்சம்பட்டு தமிழ் பிரதர்ஸ் அணி வெற்றி பெற்று, முதல் பரிசாக ரூ. 20 ஆயிரத்தை வென்றது. 2வது பரிசை வம்புப்பட்டு அப்துல்கலாம் அணியும், 3ம் பரிசை அண்ணாமலை யுனிவர்சிட்டி அணியும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். விளையாட்டு வீரர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது