மகள் மாயம்; தந்தை புகார்

வானூர்; வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

வானூர் அடுத்த கரசானுார் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி,51; இவரது மகள் சந்தியா,20; பி.எஸ்சி., நர்சிங் பட்டதாரியான இவர், புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 25ம் தேதி காலை வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து கோவிந்தசாமி, அளித்த புகாரின் பேரில் வானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement