என்.ஆர்., காங்., தொகுதி தலைவர் நிர்வாகிகள் முதல்வரிடம் ஆசி

அரியாங்குப்பம்; என். ஆர்., காங்., கட்சியின் மணவெளி தொகுதி, தலைவராக நியமிக்கப்பட்ட குமரேசன் என்கிற குமரவேல் மற்றும் புதிய நிர்வாகிகள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதுச்சேரி என். ஆர்., காங்., கட்சி, மணவெளி தொகுதி தலைவராக, இடையார்பாளையத்தைச் சேர்ந்த கே.கே.டி. டிராவல்ஸ் உரிமையாளர் குமரேசன் என்கிற குமரவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், தொகுதியில் வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றனர்.

தொடர்ந்து, மாநில பொதுச் செயலாளர், ஜெயபால், தேர்வு செய்யப்பட்ட தொகுதி தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், தொகுதி துணைத் தலைவர்கள் வரதராஜன், ஜானகிராமன், பொதுச் செயலாளர் ரஜினி ராஜேந்திரன், செயலாளர்கள் திருமால், கன்னியப்பன், துணை செயலாளர்கள் ஐயனார், சிவா, அருண், பொருளாளர்கள் குமாரசெல்வம், ராமலிங்கம், சக்திவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, இடையார்பாளையத்தில் தொகுதி தலைவர் இல்லத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டது.

Advertisement