தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு எம்.எல்.ஏ., நிவாரணம்

மரக்காணம்; தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.
மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு,63; இவரது கூரை வீடு கடந்த 21ம் தேதி மின் கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது.
சேதமடைந்த வீட்டை அர்ஜூனன் எம்.எல்.ஏ., நேற்று பார்வையிட்டு ராமு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரிசி, துணி மற்றும் ரூபாய் 5 ஆயிரம் வழங்கினார். மேலும் அரசு மூலம் இலவச வீடு வழங்க பரிந்துரை செய்வதாக கூறினார். முன்னாள் ஊராட்சி தலைவர் சிவகுமார், கிளை செயலாளர்கள் வரதராஜ், கோசலைராமன் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: மயிலாடுதுறையில் அதிர்ச்சி
-
மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!
-
சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
-
ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை; இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 சரிவு
-
குழந்தைகளிடம் வன்முறையை விதைக்கும் ஆயுதங்களின் வடிவிலான எழுது பொருட்கள்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
Advertisement
Advertisement