வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.85 லட்சம் பணம் திருட்டு

விக்கிரவாண்டி; வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தை சேர்ந்தவர் சகாயராஜ்,59: இவர் நேற்று முன்தினம் தனது ஓட்டு வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள மற்றொரு வீட்டில் படுத்து துாங்கினார்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது ஓட்டு வீட்டின் பூட்டு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரொக்க பணம் ரூ. 1.85 லட்சம் மற்றும் பித்தளை அண்டா, தவளை உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement