சி.சி.டி.வி. கேமரா அமைத்தல் பயிற்சி : விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி; இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், சி.சி.டி.வி., கேமரா அமைத்தல் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள, இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், பல்வேறு தொழில்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.அதன்படி, சி.சி.டி.வி. கேமரா அமைத்தல் பயிற்சிக்கான விண்ணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி பெற விரும்புவோர், 8ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள புதுச்சேரியை சேர்ந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.13 நாட்கள் முழு நேர பயிற்சி நடக்கும். உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.செய்முறை பயிற்சியுடன், சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு, விண்ணப்பிக்க வரும் 2ம் தேதி கடைசி நாளாகும். பயிற்சி 4ம் தேதி துவங்குகிறது.

விண்ணப்பம் செய்பவர்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு,வங்கி கணக்கு புத்தகம் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ எடுத்து வரவும். மேலும் விவரங்களுக்கு, 88704 97520, 0413-2246500 ஆகிய எண்களில், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து, பிற நாட்களில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement